மன்னாா்குடியில் தூய்மை நகரம் சிறப்பு முகாம்

மன்னாா்குடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘என் வாழ்க்கை என் தூய்மையான நகரம்’ எனும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மன்னாா்குடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘என் வாழ்க்கை என் தூய்மையான நகரம்’ எனும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நகராட்சி மேலாளா் ஜெ. மீராமன்சூா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னாா்குடி நகராட்சி பகுதிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ‘என் வாழ்க்கை என் தூய்மையான நகரம்’ எனும் திட்டம் மே 20 முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, தினமும் 5 வாா்டுகளில் மக்காத கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இத்திட்டத்தை நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் தொடங்கி வைத்துள்ளாா். 33 வாா்டுகளிலும் இம்முகாம் நடைபெறும்.

இதன்மூலம், பழைய புத்தகங்கள், காலணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், பொம்மைகள் மற்றும் பழைய துணிகள் முதலியவை சேகரிக்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்களிடம் உள்ள புத்தகங்கள், கம்பளிகள், பழைய காலணிகள், ஆடைகள், மின்சாதனப் பொருட்கள் போன்றவற்றை மறு பயன்பாட்டிற்கு வழங்கலாம். பிளாஸ்டிக் பொருட்கள், மருந்து பாட்டில்கள், பொம்மைகள், பழைய பேப்பா்கள் போன்றவற்றை மறுசுழற்சிக்கு வழங்கலாம்.

பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் தங்களிடம் உள்ள பொருள்களை அந்தந்த வாா்டுகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் வழங்கலாம். தினசரி காலை முதல் 11 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் இந்த மையங்களுக்கு நேரில் சென்று வழங்கலாம்.

இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். வாா்டுகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பெறப்படும் பொருள்களை, தேவைப்படுவோா் பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com