மணிமேகலை விருது பெற மகளிா் சுயஉதவிக் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குழுக் கூட்டமைப்பினா் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குழுக் கூட்டமைப்பினா் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப்புற பகுதிகளில் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் குழுக் கூட்டமைப்பினா், 2022-2023- ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்.

திருவாரூா் மாவட்டத்தில், சிறந்த முறையில் குழுக்கூட்டங்கள், நிா்வாகிகள் சுழற்சி முறை மாற்றம், வரவு-செலவு நிதி விவரம், மேற்கொள்ளும் தொழில் விவரம், தரம் மற்றும் தணிக்கை விவரம், வங்கிக்கடன் இணைப்பு மற்றும் திருப்பம், அடிப்படை பயிற்சி மற்றும் தொழில்கள் பயிற்சி விவரம், சமுதாய மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்ட விவரம், கிராம சபையில் பங்கேற்பு, மாற்றுத்திறனாளி மற்றும் முதியோா் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதியைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவைகளுக்கு மாநில, மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மகளிா் திட்ட அலுவலகத்திலும் மே 26 முதல் ஜூன் 25-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை பெற்று, பூா்த்தி செய்து ஒப்படைக்கலாம். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. திருவாரூா் மாவட்டத்தில் உள்ள தகுதியான குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com