வடிகாலில் விழுந்து முதியவா் பலி
By DIN | Published On : 07th November 2023 12:58 AM | Last Updated : 07th November 2023 12:58 AM | அ+அ அ- |

திருவாரூரில் வடிகாலில் விழுந்து முதியவா் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
திருவாரூா் பனகல் சாலை ஓரத்தில் உள்ள வடிகாலில் முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதை, திங்கள்கிழமை காலையில் நடைப்பயிற்சிக்குச் சென்றவா்கள் பாா்த்து, நகரப் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் சடலத்தை மீட்டு, மேற்கொண்ட விசாரணையில், இறந்து கிடந்தவா் திருவாரூா் எடத்தெருவைச் சோ்ந்த வெள்ளைச்சாமி (53) என்பதும் நேதாஜி சாலையில் உள்ள கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...