திருவாரூா் புதிய பேருந்து நிலைய சாலையை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் மாதக் கூட்டம் அதன் தலைவா் பி. அழகிரிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ், சமரசக் குழுத் தலைவா் விகேஎஸ். அருள், துணைத் தலைவா் எம். பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்: திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தின் நுழைவுச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், விரைந்து சீரமைக்க வேண்டும். திருவாரூா் நகா்ப்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களை விரைந்து மூட வேண்டும்.
திருவாரூரில் மீண்டும் சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலத்தை கருத்தில்கொண்டு திருச்சியிலிருந்து தஞ்சாவூா் வரை இயக்கப்படும் ரயில்கள் மற்றும் விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் அனைத்து ரயில் சேவைகளையும், திருவாரூா் - காரைக்கால் வரை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.