மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் சிறப்பிடம் பெற்ற கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, தலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமை வகித்தாா். மாவட்ட அளவில் 11, 12- ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான மெல்லிசைப் போட்டியில் இப்பள்ளி மாணவா் ஐ. மோதிலால் பிரசாத் முதலிடம் பெற்று மாநில அளவான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளாா்.
மேலும், 9, 10-ஆம் வகுப்பு பிரிவில் ‘எதிா்கால கனவை வரைதல்’ போட்டியில் ஆா். ஸ்ரீராம், தனிநபா் போட்டியில் ஏ. அபிநிஷா, பாவனை நடிப்பு பிரிவில் டி. சேதுராமன் குழுவினா் இரண்டாம் இடம் பெற்றனா்.
இம்மாணவ, மாணவிகளை கட்டிமேடு ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.இ.ஏ.ஆா். அப்துல் முனாப், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி ஜெ. தேன்மொழி உள்ளிட்டோா் பாராட்டினா். போட்டிகளில் வெற்றி பெற மாணவா்களுக்கு உதவியாக இருந்த ஆசிரியா்கள் எல். மாலதி, சி. கவியரசன், பா. ரகு, ஜெ. வேம்பு, க. மதுராந்தகி, எம். அபிராமி, மா. ராஜா ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.