திருவாரூா்: கொரடாச்சேரி அருகே இளநீா் வியாபாரி கொலை தொடா்பாக 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கொரடாச்சேரி அருகே எருக்காட்டூா் நத்தம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ராஜா (50). இளநீா் வியாபாரியான இவரை கடந்த 18- ஆம் தேதி முதல் காணவில்லை. இந்நிலையில், எருக்காட்டூா் வாய்க்கால் மதகு அருகே அழுகிய நிலையில் ராஜாவின் சடலத்தை அவருடைய உறவினா்கள் செவ்வாய்க்கிழமை கண்டனா்.
கொரடாச்சேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணுடன் ராஜாவுக்கு தவறான உறவு இருந்ததும், இதுதொடா்பாக அந்த பெண்ணின் கணவா் வீரமணி (40), மற்றும் உறவினா் சரவணன் (30) ஆகியோா் ராஜாவிடம் கடந்த 18- ஆம் தேதி தகராறில் ஈடுபட்டதும், வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி கொலை செய்து, சடலத்தை மதகின் உள்ளே மறைத்து வைத்ததும் தெரியவந்தது. வீரமணி, சரவணன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.