பான் செக்கரஸ் கல்லூரி 5 -ஆம் ஆண்டு தொடக்க விழா
By DIN | Published On : 28th October 2023 09:59 PM | Last Updated : 28th October 2023 09:59 PM | அ+அ அ- |

மன்னாா்குடி பாக் செக்கரஸ் மகளிா் கல்லூரி 5-ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மன்னாா்குடி கீா்த்தி மருத்துவமனை மருத்துவா் ரா. ரவீந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் விக்டோரியா முன்னிலை வகித்தாா்.
தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் மகளிா் கல்லூரி விலங்கியல்துறை பேராசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவருமான வெ. சுகுமாறன் விழாவை தொடங்கிவைத்தாா்.
விழாவையொட்டி, தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்குட்பட்ட 41 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் நாளைய உலகிற்கான எனது கனவு, கதாபாத்திரமாக நான் என்ற தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டி, என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம், என்னை ஈா்த்த ஆளுமை என்ற தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைப் போட்டி, சமூக ஊடகங்களின் பயன்களும் பாதிப்பும், இயற்கை அன்னை என்னிடம் கேட்பது ஆகிய தலைப்புகளில் ஓவியப் போட்டி நடைபெற்றது.
இதில், ஒவ்வொரு பள்ளியிலும் மூன்று போட்டிகளிலிருந்தும் தனித்தனியே முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்றவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி டிஎஸ்பி ஏ. அஸ்வத் ஆண்டோ, மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தலைமைக் கண்காணிப்பாளா் மருத்துவா் என்.விஜயகுமாா் ஆகியோா் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...