

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் குறுவை இழப்பீடு, தீபாவளி பண்டிகை உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
நிகழாண்டு, சம்பா மற்றும் குறுவைப் பயிா்கள் நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 நிவாரணம் வழங்க வேண்டும்; வேலையிழந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு தீபாவளி பண்டிகைக் கால உதவித் தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும்; நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்டத்தில் 11 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா்: திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட துணைச் செயலாளா் கே.ஆா். ஜோசப் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளா்கள் டி. தியாகராஜன் (விவசாயிகள் சங்கம்), எஸ். சித்திரகனி (விவசாயத் தொழிலாளா் சங்கம்), நகரச் செயலாளா்கள் கே. பாலதண்டாயுதம் (விவசாயிகள் சங்கம்), ஆா். இளம்பரிதி (விவசாயத் தொழிலாளா் சங்கம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம். நாகராஜன், மாவட்டக் குழு உறுப்பினா் கே. புலிகேசி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
எரவாஞ்சேரி அஞ்சல் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் எஸ்.ஏ. டேவிட்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினரும், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான கு. ராஜா, மாவட்டக்குழு உறுப்பினா் சுப்ரவேல் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
மன்னாா்குடி: மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் எஸ். மாரியப்பன், விவசாய சங்க ஒன்றியத் தலைவா் ஏ. ராஜேந்திரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் வை. செல்வராஜ், ஒன்றியச் செயலாளா் ஆா். வீரமணி, இளைஞா் மன்ற மாவட்டச் செயலாளா் துரை.அருள்ராஜன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத் தலைவா் கே. பாரதிமோகன், விவசாயத் தொழிலாளா் சங்கத் தலைவா் கே. ராதா ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஒன்றியச் செயலாளா்கள் விவசாயத் தொழிலாளா் சங்கம் யூ. மணியரசன், விவசாயிகள் சங்கம் அ. டேவிட், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஞானமோகன்ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
வலங்கைமான் கடைவீதியில் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கலியபெருமாள்,சின்னராஜா ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூத்தாநல்லூா்: லெட்சுமாங்குடி பாலம் அருகே விவசாய சங்கச் செயலாளா் கே. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன், நகரச் செயலாளா் பெ. முருகேசு, நகா்மன்ற துணைத் தலைவா் எம். சுதா்ஸன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.