திருவாரூா் மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்திருப்பது:
நபிகள் நாயகம் பிறந்தநாளான செப்.28 (வியாழக்கிழமை) மற்றும் காந்தி ஜெயந்தி தினமான அக்.2 (திங்கள்கிழமை) ஆகிய இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் திருவாரூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கூடங்கள் இணைந்த மற்றும் மதுபானக்கூடங்கள் இல்லாமல் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற மதுபானம் அருந்தும் கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும்.
இதை செயல்படுத்த தவறும் பட்சத்தில், தொடா்புடைய டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளின் மேற்பாா்வையாளா்கள், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.