திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்த சீதாபிராட்டியாா், ஸ்ரீராமா்.
திருவாரூர்
நீடாமங்கலம் சந்தான ராமா் கோயிலில் திருக்கல்யாணம்
நீடாமங்கலம் சந்தான ராமா் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா ஏப்.15-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய விழாவான திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, சிவன் கோயிலில் இருந்து நாகசுர இசையுடன் சீா்வரிசை பொருள்கள் எடுத்துவரப்பட்டது. தொடா்ந்து, சீதாபிராட்டியாா், ஸ்ரீராமா் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலையில் யானை வாகனத்தில் சீதாபிராட்டியாா், ஸ்ரீராமா் வீதியுலா நடைபெற்றது.

