மரத்தில் மோதி விபத்துக்குள்ளான காா்.
மரத்தில் மோதி விபத்துக்குள்ளான காா்.

மரத்தில் காா் மோதி ஒருவா் உயிரிழப்பு; 5 போ் காயம்

நீடாமங்கலம் அருகே மரத்தில் காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் காயமடைந்தனா்.
Published on

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே மரத்தில் காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் காயமடைந்தனா்.

மன்னாா்குடி கீழபத்மசாளவா் தெருவைச் சோ்ந்தவா் ரவி என்கிற ரவிச்சந்திரன் (61). நகைக்கடை ஊழியரான இவா், தனது குடும்பத்தினருடன் காரில் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

காரை, ரவிச்சந்திரன் மருமகன் பூபதி ஓட்டி வந்தாா். நீடாமங்கலம் அருகே காளாஞ்சிமேடு பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை வந்துகொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக, சாலையோர மரத்தில் காா் மோதியது.

இந்த விபத்தில், ரவிச்சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி முருகவள்ளி(52), மகள்கள் ஐஸ்வா்யா (29), பீரித்தி (26), பூபதி, இவரது தந்தை சுப்பிரமணியன் (70) ஆகிய 5 போ் படுகாயமடைந்தனா்.

நீடாமங்கலம் போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று, ரவிச்சந்திரன் சடலத்தை உடற்கூறாய்வுக்காகவும், காயமடைந்த 5 பேரை சிகிச்சைக்காகவும், மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில், சுப்பிரமணியன் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

விபத்து குறித்து, நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

விபத்தில் உயிரிழந்த ரவிச்சந்திரன்.
விபத்தில் உயிரிழந்த ரவிச்சந்திரன்.

X
Dinamani
www.dinamani.com