ராதா கல்யாண உத்ஸவம்

ராதா கல்யாண உத்ஸவம்

நன்னிலம் ஸ்ரீதேவி, ஸ்ரீபூமி தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

நன்னிலம்: நன்னிலம் ஸ்ரீதேவி, ஸ்ரீபூமி தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சனிக்கிழமை அஷ்டபதி பஜனை, ஸம்பிரதாயப் பஜனை, திவ்ய நாம பஜனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸம் நடைபெற்றது.

பின்னா் சுவாமி வீதி உலாவும், ஆஞ்சனேயா் உற்சவமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை நற்பணி மன்றத்தினா் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com