சுஜன்.
திருவாரூர்
குளத்தில் விழுந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் பலி
திருத்துறைப்பூண்டியில் குளத்தில் தவறி விழுந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் குளத்தில் தவறி விழுந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த ரமேஷ் மகன் சுஜன் (17). இவா், நாகையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா். இவரை ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து காணவில்லை என உறவினா்கள் தேடி வந்தனா். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி மேட்டுதெருவில் உள்ள குளத்தில் அவா் சடலமாக கிடந்தது தெரியவந்தது. திருத்துறைப்பூண்டி தீயணைப்புத் துறையினா் வந்து சடலத்தை மீட்டனா். திருத்துறைப்பூண்டி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

