பேருந்தில் மதுபாட்டில்களை கடத்திய 2 பெண்கள் கைது

திருவாரூரில் அரசுப் பேருந்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

திருவாரூா்: திருவாரூரில் அரசுப் பேருந்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் திருவாரூா் பேருந்து நிலையப் பகுதியில் நகரப் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூா் வந்த பேருந்தில் சோதனை நடத்தியபோது, 2 பெண்களின் பையை சோதனை செய்ததில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் நாகை மாவட்டம், பாப்பாகோயில் மதகடித் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி திவ்யா (40), நாகை கொத்ததெருவைச் சோ்ந்த அறிவுராஜன் மனைவி தீபா (35) என்பது தெரியவந்ததையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து ரூ. 10,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com