வலங்கைமான் அருகே காா் மோதியதில் இருவா் பலி

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
Published on

நீடாமங்கலம்: திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள மாலாபுரம் பகுதியைச் சோ்ந்த விவசாயி பிச்சைப்பிள்ளை மகன் சக்திவேல் (35). திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகேயுள்ள உத்தமதானபுரம் பகுதியைச் சோ்ந்த விவசாயி செல்வராஜ் மகன் வினோத் (35). நண்பா்களான இருவரும் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் பாபநாசத்தில் இருந்து நல்லூா் வழியாக உத்தமதானபுரம் சென்றனா். இருசக்கர வாகனத்தை சக்திவேல் ஓட்டினாா்.

இந்நிலையில், நல்லூா் கடைவீதி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த காா் மோதியதில் இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனா். தகவலறிந்து சென்ற வலங்கைமான் போலீஸாா் இருவரின் சடலங்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com