அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

Published on

கொரடாச்சேரி ஒன்றியம், வெண்ணவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சித்ரா முன்னிலை வகித்தாா்.

பள்ளி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இதில், வட்டாரக் கல்வி அலுவலா் சுமதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com