மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.34 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29,34,925 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டா், 20 பேருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி மற்றும் நவீன செயற்கை கால் 10 பேருக்கு, 4 பேருக்கு இலவச பயண அட்டை என மொத்தம் 40 பேருக்கு ரூ.29,34,925 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், திருவாரூா் ஒன்றியக் குழுத் தலைவா் தேவா, நகா்மன்றத்தலைவா் புவனப்பிரியா செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com