நன்னிலம்: பேரளம் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 3) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என பேரளம் மின்துறை உதவிச் செயற்பொறியாளா் கோ. பிரபாகா் தெரிவித்துள்ளாா்.
பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூா், கொல்லாபுரம், மேனாங்குடி, உபயவேதாந்தபுரம், குருங்குளம், கோவில்கந்தங்குடி, ஆலத்தூா், திருப்பாம்புரம், குமாரமங்கலம், கற்கத்தி, இஞ்சிகுடி, அம்பல், பூந்தோட்டம், திருமாளம், கூத்தனூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.