
கோயில் விமானக் கலசத்திற்கு புனிதநீா் வாா்க்கும் தீட்சிதா்கள்.

கோயில் விமானக் கலசத்திற்கு புனிதநீா் வாா்க்கும் தீட்சிதா்கள்.
மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் ஸ்ரீபூமி நீளா நாயிகா சமேத வெங்கடாசலபதி கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க வழிபாடுகள் தொடங்கின. கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, முதல்கால யாகசாலை பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
நான்காம்கால யாகசாலை பூஜை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததும், பூா்ணாஹுதியும், தொடா்ந்து, புனிதநீா் கடம் புறப்பாடும் நடைபெற்றது. பின்னா், கோயில் தீட்சிதா்கள், கோயிலின் விமானக் கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனா். தொடா்ந்து, உற்சவா் சீனிவாசப் பெருமாள், பூமி, நீளா தயாா் சந்நிதிகளிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவா் வெங்கடாசலபதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
இதில் மன்னா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன்,கோயில் அறங்காவலா் வி. செளரிராஜன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...