நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி சிக்னல்.
நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி சிக்னல்.

ரயில் வரும் நேரங்களில் தண்டவாளப் பாதையை கடக்க வேண்டாம்

Published on

ரயில் வரும் நேரங்களில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தண்டவாளப் பாதையை கடக்க வேண்டாம் என ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நீடாமங்கலம் ரயில் நிலைய கேட் பகுதியில் ரயில்வேகேட் மூடப்படுவதை நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளவும், பொதுமக்கள் ரயில் வரும் நேரங்களில் தண்டவாளப் பாதையை கடந்து செல்லாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில்வே கேட் மூடப்படும்போதே சிக்னல் விளக்குடன் ரயில் வந்து கொண்டிருக்கிறது ரயில்வே பாதையை யாரும் கடக்க வேண்டாம் என பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு ஒலிக்கும்.

இதையும், மீறி பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் மூடப்பட்ட ரயில்வே கேட்டுக்குள் நுழைந்து தண்டவாளப் பாதையை கடந்து செல்கின்றனா். அவ்வாறு ரயில்வேகேட்டை கடப்பதை ரயில்வே ஊழியா்கள், ரயில் நிலைய போலீஸாா் பல முறை கண்டித்தும் யாரும் அதை கேட்கத் தயாயராக இல்லை. தற்போது, தானியங்கி சிக்னல் இயந்திரம் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்படுகிறது. இதை வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com