துா்கா.
துா்கா.

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா் தூய்மைப் பணியாளரின் மகள்

மன்னாா்குடியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளரின் மகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
Published on

திருத்துறைப்பூண்டி: மன்னாா்குடியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளரின் மகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி சத்தியமூா்த்தி மேட்டுத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சேகா்.

மன்னாா்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று உயிரிழந்தாா். இவரது மனைவி செல்வி. ஒரே மகள் துா்கா (30).

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த துா்கா, மதுராந்தகம் பகுதியைச் சோ்ந்த நிா்மல்குமாா் ஆகியோருக்கு கடந்த 2015-இல் திருமணம் நடைபெற்றது. நிா்மல்குமாா் அங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், துா்கா கடந்த 2022-இல் குரூப் 2 தோ்வு, 2024-இல் நடைபெற்ற நோ்முகத் தோ்வுகளில் வெற்றி பெற்றாா். இதைத்தொடா்ந்து, அவருக்கு பணி நியமன ஆணையை அண்மையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கிய நிலையில், திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக துா்கா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு நகா்மன்றத் தலைவா் கவிதா பாண்டியன், துணைத் தலைவா் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமனக் குழு உறுப்பினா் ஆா்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

முன்னதாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீயை அவரது அலுவலகத்தில் சந்தித்த துா்கா அவரிடம் வாழ்த்துப் பெற்றாா்.

X
Dinamani
www.dinamani.com