இருசக்கர வாகனம் - லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு
மன்னாா்குடி: மன்னாா்குடியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
வடபாதிமங்கலம் புனவாசல் பிரதான சாலையை சோ்ந்தவா் ஒப்பந்ததாரா் மாரிமுத்து (60), மாவூரை சோ்ந்தவா் ராஜராஜன்(35) மேஸ்திரி. இருவரும் பணி சம்பந்தமாக மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை வந்துள்ளனா். ராஜராஜன் வாகனத்தை ஓட்டினாா். மன்னாா்குடியில் திருவாரூா் பிரதான சாலை ஐவா் சமாது என்ற இடத்தின் அருகே வந்தபோது, அவ்வழியே புதுக்கோட்டையிலிருந்து கொரடாச்சேரிக்கு ஜல்லி பாரம் ஏற்றி வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து, ராஜராஜன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து மன்னாா்குடி ஊரக காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான குடவாசல் செல்லூரை சோ்ந்த துரை (54) என்பவரை கைது செய்தனா்.
