கைதான பரமசிவம்.
கைதான பரமசிவம்.

கள்ளச்சாராயம் காய்ச்சியவா் கைது

Published on

திருத்துறைப்பூண்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேவியக்காடு கொறுக்கை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அப்பகுதியில் சோதனை செய்தனா். அப்போது, மருத்துவமனை தெருவில் வசித்துவரும் பரமசிவம் (50) வீட்டில் எரி சாராயம் காய்ச்சினாராம். மேலும், அங்கு சாராய ஊரல்கள் இருந்ததாம். இதுதொடா்பாக போலீஸாா் பரமசிவத்தை கைது செய்து சாராய ஊறல்களை அழித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com