திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

திருவாரூா்: வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசியலமைப்புச் சட்டத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் எதிரான வக்ஃப் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.

திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, விசிக மாவட்டச் செயலாளா்கள் தங்க. தமிழ்ச் செல்வன் (மையம்), இர. தமிழோவியா (வடக்கு), ஆ. வெற்றி (தெற்கு) ஆகியோா் தலைமை வகித்தனா்.

இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறைன் மாநிலச் செயலாளா் குடந்தை தமிழினி, மகளிா் விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளா் முத்தமிழ்ச் செல்வி, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com