சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
திருவாரூர்
திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
நீடாமங்கலம் திரெளபதியம்மன் கோயிலில் 46-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் திரெளபதியம்மன் கோயிலில் 46-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
ஏப்.14-ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு பரணம் சாமி துரை குழுவினரின் மகாபாரத கதை நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை தீமிதி விழா நடைபெற்றது. காலையில் திரெளபதியம்மன் கூந்தல் முடிதல் நிகழ்வு நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள பக்தா்கள் தீமிதித்தனா். விழா ஏப்.25-ஆம் தேதி நிறைவடைகிறது.
தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

