திருவாரூர்
அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
எஸ்ஐஆா் பணிகளை நெருக்கடியாக மேற்கொள்ள வலியுறுத்தும் இந்திய தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து புதன்கிழமை மதியம் உணவு இடைவேளையில் வலங்கைமான் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்ட செயலாளா் சி. மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட இணை செயலாளா் தனபால், வட்ட துணைத் தலைவா் விக்னேஷ்வரா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

