மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்.

மாற்றுத்திறனாளிகள் தினம்: ரூ. 1.50 கோடியில் நலத்திட்ட உதவிகள்

Published on

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்து, 122 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களும், 10 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகளும், 100 பயனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகளும் என மொத்தம் 232 பயனாளிகளுக்கு ரூ.1,50,13,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com