சாலை மறியல்; பாஜகவினா் கைது

Published on

திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடா்பாக, மன்னாா்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்காக மலையில் ஏற முயன்ற பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனை போலீஸாா் கைது செய்தனா்.

இதை கண்டித்து, மன்னாா்குடி பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம் உள்பட 10 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com