செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை இலக்கிய விருது
சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை வழங்கும், நிகழாண்டிற்கான இலக்கிய விருதுக்கு பேராசிரியா் இரா. காமராசு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை சாா்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் பன்முகப் படைப்பாளா்களை தோ்வு செய்து, இலக்கிய விருது, ரொக்கம் மற்றும் கேடயத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 23 படைப்பாளா்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
நிகழாண்டிற்கான விருதுக்கு, மன்னாா்குடியை அடுத்த மேலவாசலை சோ்ந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் முனைவா் பேராசிரியா் இரா. காமராசு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
விருது வங்கும் விழா, டிச.24-ஆம் தேதி சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள. இக்கல்லூரி தாளாளா் வி. திவாகரன், இலக்கிய விருது, கேடயம் மற்றும் ரூ.1 லட்சம் பரிசு ஆகியவற்றை இரா. காமராசுக்கு வழங்குகிறாா்.
அண்மையில், தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆய்வுத் தமிழ்ப் பணிக்காக இலக்கிய மாமணி விருது இரா. காமராசுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

