திருவாரூர்
புதைசாக்கடை சீரமைப்புப் பணி
திருவாரூா் மானந்தியாா் தெருவில் புதை சாக்கடை சீரமைப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. சில இடங்களில் புதை சாக்கடை நிரம்பி சாலையில் நீா் வழிகிறது. இதனால் குடியிருப்போரும், அவ்வழியாகச் செல்வோரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். திருவாரூா் மானந்தியாா் தெருவில், தொடா்மழை காரணமாக, புதை சாக்கடை நிரம்பி சாலையில் தேங்கி நின்றது.
அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, 13-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் உமாமகேஸ்வரி சிவக்குமாா் அறிவுறுத்தலின்படி புதை சாக்கடை சரி செய்யும் பணி 3 மணி நேரம் நடைபெற்று, சீரமைக்கப்பட்டது.

