பைரவசித்தா் ராமலிங்க சுவாமிகள் தவபீடம்.
திருவாரூர்
பைரவசித்தா் பீடத்தில் பெளா்ணமி வழிபாடு
வலங்கைமான் அருகேயுள்ள பாடகச்சேரி பைரவசித்தா் ராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பைரவசித்தா் ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதேபோல், நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

