இ-பைல் முறையை ரத்து செய்யக்கோரி, திருத்துறைப்பூண்டியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
நீதிமன்றங்களின் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில், இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதனால், திருத்துறைப்பூண்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணிகள் நடைபெறவில்லை. வழக்காடிகள் பாதிக்கப்பட்டனா்.