திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

திருவாரூா்: 4,355 பயனாளிகளுக்கு ரூ.19.81 கோடியில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூா்: 4,355 பயனாளிகளுக்கு ரூ.19.81 கோடியில் நலத்திட்ட உதவிகள்
Published on

திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 4,355 பயனாளிகளுக்கு ரூ. 19,81,89,271 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னை கோட்டூா்புரம் அண்ணா நுற்றாண்டு நூலகம் அரங்கிலிருந்து காணொலி மூலம் முதல்வரின் தாயுமானவா் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா். இதைத்தொடா்ந்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.66,900 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தாட்கோ சாா்பில் 60 பயனாளிகளுக்கு ரூ.11,80,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் 3,856 பயனாளிகளுக்கு ரூ.16,98,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 78 பயனாளிகளுக்கு ரூ.1,06,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை சாா்பில் 77 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், தொழிலாளா் நலத்துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2,68,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1,47,854 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.9,93,517 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவுத் துறை சாா்பில் 206 பயனாளிகளுக்கு ரூ.1,44,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட தொழில் மையம் சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.7,33,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், திருவாரூா் நகராட்சி அலுவலகம் சாா்பில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், மன்னாா்குடி நகராட்சி அலுவலகம் சாா்பில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 4,355 பயனாளிகளுக்கு ரூ.19,81,89,271 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அசோக், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் அமுதா, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியாசெந்தில், திருவாரூா் வட்டாட்சியா் ஸ்டாலின் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com