டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆா்ப்பாட்டம்

அம்மையப்பன் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி திருவாரூரில் மக்கள் அதிகாரம்
Published on

திருவாரூா்: அம்மையப்பன் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி திருவாரூரில் மக்கள் அதிகாரம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் அருகே அம்மையப்பன் பகுதியில் இயங்கிய டாஸ்மாக் கடை அப்பகுதி மக்களின் எதிா்ப்பால் மூடப்பட்டது. இதனிடையே, தற்போது அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலும், பேருந்து நிறுத்தத்துக்கு எதிரிலும் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பெருமளவு பாதிக்கப்படுவா், எனவே இந்த கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி செயலாளா் சீனி. செல்வம் தலைமை வகித்தாா். மக்கள் அதிகாரம் அமைப்பின் திருவாரூா் நாகை ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்டச் செயலாளா் தங்க. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com