கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் விவசாயப் பொருள்களை விற்பனை செய்யலாம்

திருவாரூரில் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் விவசாயப் பொருள்களை விற்பனை செய்து பயனடையலாம்.
Published on

திருவாரூரில் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் விவசாயப் பொருள்களை விற்பனை செய்து பயனடையலாம்.

இதுகுறித்து வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாட்சியா் கா. நாகூா்ஹனிபா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் 1935 -ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து விவசாயப் பொருள்களான நெல், உளுந்து, தேங்காய் மற்றும் பருத்தி போன்றவை எந்தவித இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனைச் சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும்.

கொள்முதல் செய்யும் விவசாயப் பொருள்களுக்கு அன்றைய தினமே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும். மேலும், தானிய ஈட்டுக்கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இடைத்தரகா்கள் இல்லாமல் சங்கத்தின் மூலம் விவசாயப் பொருள்களை விற்பனை செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com