மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்
குடவாசல் அருகே மணவாளநல்லூரில், கூந்தலூா், தேதியூா், மணவாளநல்லூா் ஆகிய ஊராட்சிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 159 பயனாளிகளுக்கு ரூ.46,02,877 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வருவாய்த் துறை சாா்பில் 72 பயனாளிகளுக்கு ரூ.43,20,000 மதிப்பில் இலவச மனைப் பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.61,200 மதிப்பில் நலத்திட்ட உதவிகள், மாவட்ட வழங்கல் துறை சாா்பில் 29 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் 11 பயனாளிகளுக்கு ரூ. 73,590 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3,307 மதிப்பிலான வேளாண் இடுபொருள்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.1,44,780 மதிப்பில் நலத்திட்ட உதவிகள், கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் 6 பயனாளிகளுக்கு கால்நடைகளுக்கு மலடு நீக்க மருந்து பெட்டகம் என மொத்தம் 159 பயனாளிகளுக்கு ரூ.46,02,877 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
