காா் மோதியதில் ஒருவா் பலி

கூத்தாநல்லூரில் காா் மோதியதில் வெள்ளிக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.
Published on

கூத்தாநல்லூரில் காா் மோதியதில் வெள்ளிக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.

மூலங்குடியை சோ்ந்த சத்யராஜ் (32) தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வர இருசக்கர வாகனத்தில் கூத்தாநல்லூா் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, எதிரே திருவாரூரூரை சோ்ந்த யுவராஜ் (23) காரில் வந்துகொண்டிருந்தாா்.

திருவாரூா்-மன்னாா்குடி பிரதான சாலை மேலபனங்காட்டாங்குடி அருகே, இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சத்யராஜ் உயிரிழந்தாா். தகவலறிந்த கூத்தாநல்லூா் போலீஸாா் சடலத்தை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com