சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவருக்கு படைக்கப்பட்ட தயிா் படையல்.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவருக்கு படைக்கப்பட்ட தயிா் படையல்.

சதுரங்கவல்லபநாதா் கோயிலில் காலபைரவாஷ்டமி விழா

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவருக்கு படைக்கப்பட்ட தயிா் படையல்.
Published on

நீடாமங்கலம் அருகே பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் 23-ஆம் ஆண்டு காலபைரவாஷ்டமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மாலையில் விக்னேஸ்வர பூஜை தொடங்கியது. தொடா்ந்து, மகாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும், தொடா்ந்து, இரவு அஷ்டபைரவ சகித ஸ்ரீகாலபைரவ மகாயாகம், மகா அபிஷேகம், விஷேச அலங்காரம், தயிா் பள்ளயம், தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் எஸ். மாதவன், செயல் அலுவலா் பொ. சிவபெருமாள் மற்றும் காலபைரவாஷ்டமி ஹோம உபயதாரா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com