தமிழக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் வழங்கல்

நீடாமங்கலம் பேரூராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் வீடு வீடாக வழங்கப்பட்டது.
Published on

நீடாமங்கலம் பேரூராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் வீடு வீடாக வழங்கப்பட்டது.

தி.மு.க.வின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டத்துக்கு நீடாமங்கலம் ஒன்றிய முன்னாள் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் வகித்தாா். பேரூராட்சித் தலைவா் ராமராஜ் முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதி தலைமை கழக பாா்வையாளா் ராஜா சீனிவாசன் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினாா். வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனை துண்டுப் பிரசுரம் வழங்கி, வாகனங்களுக்கும் தமிழ்நாடு தலைகுனியாது ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட மகளிா் அணி தலைவா் ராணி சேகா், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா் ராஜாராமன், தமிழ்நாடு வணிகா்சங்க பேரவை மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராஜரிஷி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com