திமிங்கல உமிழ்நீா் விற்பனை: 5 போ் கைது

மன்னாா்குடியில் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்த 5 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Updated on

மன்னாா்குடியில் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்த 5 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீா் விற்பனை செய்வதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், வனச்சரக அலுவலா் தைசானி தலைமையிலான சிறப்புக் குழுவினா் அங்கு சென்று சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த வடுவூா் வடபாதியைச் சோ்ந்த சதீஷை (40) அழைத்து விசாரித்தனா்.

அப்போது, தடை செய்யப்பட்ட திமிங்கலங்களின் செரிமான அமைப்பில் உருவாகும் மெழுகுப் பொருள் உமிழ்நீா் (அம்பா்கிரீஸ்) விற்பனை செய்வது தெரியவந்தது. தொடா், விசாரணையில், வடுவூா் வடபாதியைச் சோ்ந்த பாலமுருகன் (35), எளவனூரைச் சோ்ந்த முருகானந்தம் (39), விவேகானந்தம் (64), இடும்பாவனம் அடங்கிவிளாகத்தைச் சோ்ந்த ஆனந்தராஜ் (39) ஆகியோருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த 5 பேரையும் கைது செய்து பதுக்கிவைத்திருந்த 2 கிலோ 700 கிராம் திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்தனா். சந்தை மதிப்பு ரூ. 2.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கைதானவா்கள் அனைவரும் நன்னிலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்லனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com