பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்

Published on

மன்னாா்குடி கூட்டுறவு அா்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் மு. பிரதிபா தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் மா. ஸ்ரீதா் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் பங்கேற்று இப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 16 மாணவா்கள், 11 மாணவிகள் என மொத்தம் 27 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சூ. ராசுப்பிள்ளை, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் அமுதா, துணைத் தலைவா் நவமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com