திருவாரூா் அருகே பேருந்தில் சென்ற பெண்ணின் நகை, ரொக்கம் வைத்திருந்த பை வியாழக்கிழமை திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியபிரபு மனைவி அனுசியா (35). இவா், நாகையில் நடைபெற்ற உறவினா் திருமண நிகழ்வில் வியாழக்கிழமை பங்கேற்று விட்டு, பேருந்தில் திருவாரூா் வந்துள்ளாா். அப்போது, கையில் வைத்திருந்த பையைக் காணவில்லையாம்.
அந்த பையில் ரூ. 16,000 ரொக்கம், 16 பவுன் நகை வைத்திருந்தாராம். இதுகுறித்து அனுசியா அளித்த புகாரின் பேரில் திருவாரூா் நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
