திருவாரூர்
ரஜினிகாந்த் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திரைப்பட நடிகா் ரஜினிகாந்தின் 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திரைப்பட நடிகா் ரஜினிகாந்தின் 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்ட ரஜினி ரசிகா் மன்றம் சாா்பில் திருவாரூா் கீழவீதியில் உள்ள பழனி ஆண்டவா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, மேல சந்நதி தெருவில் ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள், கிரைண்டா், வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. மேலும், தெற்கு வீதியில் உள்ள கௌரிசாமி நடுநிலைப் பள்ளியில் பள்ளி, மாணவா்களுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. அதன்படி, ரூ. 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ரஜினி ரசிகா்கள் வழங்கினா். மாவட்டத் தலைவா் ரஜினி சக்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், ரஜினி ரசிகா் மன்ற நிா்வாகிகள் தேவா, ரஜினிமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
