விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாக குழுக் கூட்டம்
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகக் குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நிா்வாகி விஜயா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து அரசியல் நிகழ்வுகள் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சிகள், ஆா். நல்லகண்ணுவின் 100-ஆவது ஆண்டு அகவை நிறைவு, வெண்மணி தியாகிகள் கேடிகே தங்கமணி நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து பேசினாா். மாவட்ட செயலாளா்கு. ராஜா, தாட்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கப்படும் நிதி மடைமாற்றம் செய்து வேறு பணிகளுக்கு செலவிடப்படுகிறது. படித்த பட்டியலின இளைஞா்களுக்கு தொழில் தொடங்க முழு மானியத்தில் கடன் வழங்க வேண்டும், தொடா்ந்து, 100 நாள் வேலை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாலும் டித்வா புயலினால் பெய்த தொடா் மழையால் வேலையில்லாமல் விவசாயத் தொழிலாளா்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறாா்கள். தமிழா்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு விவசாயத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5000 வழங்க வேண்டும் என்றாா்.
