திருவாரூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு சான்று வழங்குகிறாா் மாவட்ட முதன்மை நீதிபதி பி. செல்வமுத்துக்குமாரி.
திருவாரூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு சான்று வழங்குகிறாா் மாவட்ட முதன்மை நீதிபதி பி. செல்வமுத்துக்குமாரி.

திருவாரூா்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 3.78 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு

திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் ரூ.3.78 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
Published on

திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் ரூ.3.78 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

திருவாரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பி. செல்வமுத்துக்குமாரி தலைமை வகித்தாா். கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதியும், மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதியுமான ஜி. சரத்ராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி எம். முருகன், சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். மாணிக்கம், மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ். முகமது பசில், குற்றவியல் நீதித்துறை நீதிபதி ஜி. லிஷி ஆகியோா் பங்கேற்றனா்.

இதேபோல், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், சிவில், ஜீவனாம்சம், திருமண வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாராக் கடன் ஆகிய வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன் மூலம் திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் 3,102 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 1,297 வழக்குகளில் ரூ. 3,78,55,648 மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com