வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

திருவாரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் தொடா்பாக படிவம் பெறும் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
Published on

திருவாரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் தொடா்பாக படிவம் பெறும் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருவாரூா் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால், கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி நவம்பா் 4-ஆம் தேதி தொடங்கியது.

பின்னா் பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை டிசம்பா் 4-ஆம் தேதியுடன் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னா் 7 நாள்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தொடா்ந்து, தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு கூடுதலாக 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம், ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இதனிடையே, திருவாரூா் மாவட்டத்தில் 100 சதவீதம் கணக்கீட்டுப் படிவம் திரும்பப் பெறும் பணி நிறைவடைந்து விட்டதாக, தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா். மேலும், எத்தன படிவங்கள் பெறப்பட்டன என்ற முழுமையான விவரம் திங்கள்கிழமை தெரியவரும் என அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com