சாலை விபத்தில் ஒருவா் பலி!

கொரடாச்சேரி அருகே சாலை விபத்தில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

கொரடாச்சேரி அருகே சாலை விபத்தில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கொரடாச்சேரி அருகேயுள்ள ஊா்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மகன் கோட்டைச்சாமி (55). இவா் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஊா்குடி பிரிவு சாலை அருகே சனிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா் மோதியதில் கோட்டைச்சாமி பலத்த காயமடைந்தாா்.

சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கோட்டைச்சாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com