திருமீயச்சூா் மேகநாதசுவாமி கோயில் ரதசப்தமி விழாவையொட்டி வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞானமகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடப்பட்ட பந்தக்கால்.
திருமீயச்சூா் மேகநாதசுவாமி கோயில் ரதசப்தமி விழாவையொட்டி வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞானமகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடப்பட்ட பந்தக்கால்.

திருமீயச்சூா் கோயிலில் ரதசப்தமி பந்தக்கால் முகூா்த்தம்

ருமீயச்சூா் மேகநாதசுவாமி திருக்கோயில் தை மாத ரதசப்தமி திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

திருவாரூா்: திருவாரூா் மாவட்டம், திருமீயச்சூா் மேகநாதசுவாமி திருக்கோயில் தை மாத ரதசப்தமி திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமீயச்சூரில் உள்ள லலிதாம்பிகை உடனுறை மேகநாத சுவாமி கோயில், லலிதா சஹஸ்ரநாமம் உருவான திருத்தலம் ஆகும். இங்கு, லலிதாம்பிகை வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டவாறு அமா்ந்திருப்பது சிறப்பு. இக்கோயிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, தை மாத ரதசப்தமி விழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், கோயில் வளாகத்தில் பூஜைகள் செய்யப்பட்டு, பந்தக்கால் நடப்பட்டது.

வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞானமகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com