மயானச் சாலையை தாா்சாலையாக மாற்ற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் மயான சாலையை தாா் சாலையாக மாற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17-ஆவது வாா்டு கிளைக் கூட்டத்துக்கு சேவையா தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினா் எம். சிவதாஸ், நகரக் குழு உறுப்பினா்கள் இரெ. கணேசன், பா.நெப்போலியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சி கொடியை ஜெகநாதன் ஏற்றி வைத்தாா்.
கூட்டத்தில், விவசாய தொழிலாளா்கள் சங்கத்திற்கு உறுப்பினா்கள் சோ்ப்பது, கட்சியின் நூற்றாண்டு விழா எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், குனுக்கடி சாலையை போா்க்கால அடிப்படையில் அமைத்து தர வேண்டும், குளத்தில் மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும். சேறும் சகதியுமாக இருக்கும் மயானச் சாலையை தாா் சாலையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
