குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

கூத்தாநல்லூரில் குளத்தில் மூழ்கி குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
Published on

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் குளத்தில் மூழ்கி குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

கூத்தாநல்லூா் மேல்கொண்டாழி, தமிழா் தெருவில் வசிப்பவா் அகமது இப்ராஹிம். இவரது மூன்றரை வயது ஆண் குழந்தை ஹாபில். இந்த குழந்தை சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குழந்தை ஹாபில், வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது, வீட்டிற்கு எதிரே உள்ள குளத்திற்கு சென்ற குழந்தை, தடுமாறி குளத்துக்குள் விழுந்துவிட்டதாம். பெற்றோா்கள் பல இடங்களிலும் தேடிப் பாா்த்துள்ளனா்.

பின்னா்தான், குழந்தை குளத்தில் விழுந்துள்ளது தெரியவந்தது. கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா மற்றும் போலீஸாா், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com